search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.ஐ. இயக்குனர்"

    ஐ.பி.எஸ். அதிகாரி ரிஷிகுமார் சுக்லா, சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். #RishiKumarShukla #CBIDirector
    புதுடெல்லி:

    ஐ.பி.எஸ். அதிகாரி ரிஷிகுமார் சுக்லா, சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். 1983-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான ரிஷிகுமார் சுக்லா மத்திய பிரதேசத்தில் டி.ஜி.பி.யாக பணியாற்றியவர். உளவுப்பிரிவில் சிறந்த அனுபவம் வாய்ந்த இவர் சி.பி.ஐ.யின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ரிஷிகுமார் சுக்லா நேற்று இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டெல்லி தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், புதிய இயக்குனருக்கு, இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வரராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல அதிகாரிகளும், ஊழியர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரிஷிகுமார் சுக்லா, 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

    சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்காளத்தில் மாநில போலீசாருக் கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை யில் சி.பி.ஐ.யின் இயக்குனராக ரிஷிகுமார் சுக்லா பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. #RishiKumarShukla #CBIDirector 
    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். #AlokVerma #CBIDirector #SupremeCourt
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக தலையிட்டது. அவர்கள் 2 பேரது அதிகாரத்தையும் பறித்து விடுப்பில் அனுப்பியது. சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக எம். நாகேஸ்வரராவை நியமித்தது.



    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. அலோக் வர்மாவுக்காக மூத்த வக்கீல் பாலி நாரிமன், மத்திய அரசுக்காக அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்காக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

    நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிவுக்கு வந்தது. தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். #AlokVerma #CBIDirector #SupremeCourt 
    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது. அப்போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய விசாரணை அறிக்கையை பரிசீலிக்கும். #SupremeCourt #CBI #AlokVerma
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யில் அதன் இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டம் அடைந்தபோது, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. 2 பேரின் அதிகாரத்தையும் ஒரே நாளில் பறித்து, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

    கடந்த மாதம் 23-ந் தேதி எடுக்கப்பட்ட மத்திய அரசின் இந்த முடிவால் அதிர்ச்சிக்குள்ளான அலோக் வர்மா, அந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டார்.

    அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, அவசர வழக்காக சென்ற மாதம் 26-ந் தேதி விசாரித்தது.



    அப்போது, அலோக் வர்மா மீது ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், முதல் கட்ட விசாரணையை 2 வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும், இந்த விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.

    மேலும், சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகளையோ, எந்த விதமான கொள்கை முடிவுகளையோ எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

    அத்துடன் நாகேஸ்வரராவ் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் எடுத்துள்ள முடிவுகளை (விசாரணைகள் மாற்றம், விசாரணை அதிகாரிகள் மாற்றம் உள்ளிட்டவை) மூடி முத்திரையிட்ட உறையில் நவம்பர் மாதம் 12-ந் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியது.

    இந்த உத்தரவுகளை தொடர்ந்து கே.வி.சவுத்ரி தலைமையிலான 3 உறுப்பினர்களை கொண்ட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், அலோக் வர்மாவிடம் விசாரணை நடத்தியது.

    ராகேஷ் அஸ்தானா செய்துள்ள புகார்கள் அடிப்படையில், மத்திய மந்திரிசபை செயலாளரின் ஆகஸ்டு 24-ந் தேதியிட்ட கடிதத்தின் (குறிப்பின்) படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு அலோக் வர்மா விரிவான விளக்கம் அளித்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரணை நடத்த உள்ளது. அப்போது தாக்கல் செய்யப்படுகிற மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அறிக்கையை நீதிபதிகள் பரிசீலிப்பார்கள்.

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து அது தொடர்பான உத்தரவுகளையும் நீதிபதிகள் பிறப்பிப்பார்கள்.

    இதற்கிடையே சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக பின்னர் பட்டியலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி ‘காமன்காஸ்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று, மத்திய அரசுக்கும், சி.பி.ஐ.க்கும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியது நினைவுகூரத்தக்கது.

    சி.பி.ஐ. இயக்குனர் நீக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. #RahulGandhi #Modi #RafaelCase
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

    சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.



    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, ‘சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்தார். ஆனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளார். இதில் பிரதமர் மோடியின் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது ரபேல் பிரச்சினைக்கு அருகில் யார் வந்தாலும் நீக்கப்படுவார், துடைத்து எறியப்படுவார். நாடும் அரசியல் சட்டமும் மிகுந்த ஆபத்தில் உள்ளன’ என்று கூறிருந்தார்.

    முன்னதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் தளத்தில், ‘சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு அமைப்பு) இனிமேல் பி.பி.ஐ. (பா.ஜனதா புலனாய்வு அமைப்பு) என்று அழைக்கப்படும். மிகவும் துரதிர்ஷ்டம்’ என்று கிண்டலாக குறிப்பிட்டு உள்ளார்.

    அலோக் வர்மாவின் நீக்கத்தை சட்டவிரோதம் எனக்கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்த பதற்றமான நடவடிக்கை மூலம் மோடி அரசு எதை மறைக்க முயற்சிக்கிறது? என கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ. அமைப்பு ஒரு கூண்டுக்கிளி அல்ல என்பதை உறுதி செய்வதற்காகவே அதன் இயக்குனருக்கு 2 ஆண்டு பணிப்பாதுகாப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

    இதே கருத்தை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் எதிரொலித்துள்ளார். லோக்பால் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை நிறுவனத்தின் தலைவரை எந்த சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு நீக்கி இருக்கிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
    ×